உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐசிசி டி20 உலகக் கிண்ணம்: இலங்கை – நியூசிலாந்து முக்கிய மோதல் இன்று .!

54 பார்வைகள்

ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குழு 2-இல் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் மோதவுள்ளன.இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் இப்போட்டியில் வெற்றி பெறுவது அவசியமான நிலையாக உள்ளது.

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அந்தப் போட்டியில் 147 ஓட்டங்கள் இலக்கை துரத்த முற்பட்ட இலங்கை அணி, 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.சொந்த மைதானத்தில் விளையாடும் இலங்கை அணி, முந்தைய போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

துடுப்பாட்டத்தில் பதும் நிஸ்ஸங்க சிறந்த நிலையில் உள்ளார். பந்துவீச்சில் துனித் வெல்லாலகே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் தில்ஷான் மதுசங்க உள்ளிட்ட வேகப் பந்துவீச்சாளர்களும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.மறுபுறம், மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி வலுவான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளது.

தொடக்க வீரர்கள் பின் ஆலன் மற்றும் டிம் சிபர்ட் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். ரச்சின் ரவீந்திரா சமீபத்திய ஆட்டத்தில் அரை சதம் விளாசி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் தாக்குதல் ஆட்டத்தில் திறமை பெற்றவர்கள்.

பந்துவீச்சில் லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால், இரு அணிகளும் முழு கவனத்துடன் களமிறங்கவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0