உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சூப்பர் எட்டு சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து.!

50 பார்வைகள்

2026 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 45ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.


முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. அணியின் ஆரம்ப வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக 63 ஓட்டங்களை எடுத்தார்.165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த இங்கிலாந்து அணிக்கு பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி கடும் சவாலை ஏற்படுத்தினார்.

அவரது அபார பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறியது.எனினும், நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எட்டி வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0