உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முன்னாள் மனைவிக்கு ரூ. 4 கோடி மகிழுந்து பரிசளித்த ஹர்திக் பாண்டியா.!

63 பார்வைகள்

இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் மனைவி நடாசா ஸ்டான்கோவிச் மற்றும் மகன் அகஸ்தியாவிற்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான சொகுசு விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
மும்பையில் உள்ள வாகன விற்பனை நிலையத்தில், அந்த வாகனத்தை நடாசா மற்றும் அவரது மகன் பெற்றுக்கொள்ளும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

வாகனத்தின் பின்புறத்தில் “தந்தையிடமிருந்து அகஸ்தியாவிற்கு ஒரு பரிசு” என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஹர்திக் பாண்டியாவும் நடாசா ஸ்டான்கோவிச்சும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2024ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இருப்பினும், தங்களது மகனை இருவரும் மாறிமாறி கவனித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.


விவாகரத்திற்குப் பின்னர், மாடல் துறையைச் சேர்ந்த மஹிகா ஷர்மா உடன் ஹர்திக் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் ஹர்திக் கலந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளன.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஹர்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 87 ஓட்டங்களும் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்து வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0