உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாகர் கோவில் பிள்ளையார் ஆலயத்தில் அநாகரீக செயற்பாடுகளில் ஈடுபடும் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் தெற்கு சுடலைபிட்டி பிள்ளையார் கோவில் ஆலய வளாகத்தில் அப்பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சில தொழிலாளர்கள் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ஆலயத்தின் புனித தன்மையை மதிக்காமல் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுதல், மீன்பிடி உபகரணங்களை ஆலய வளாகத்தில் வைத்து விடுதல், தமது வாகனங்களை ஆலய வளாகத்துக்குள் நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த செயற்பாடுகள் ஆலயத்தின் புனிதத்தை பாதிப்பதாகக் கூறி, ஆலய தொண்டர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆலய புனித பூமியை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர்கள்ஆலய மரியாதையை பேணி நடக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

54 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0