உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதானவர்களிடம் விசாரணைகள் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.

அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தொடர் சுற்றிவளைப்புகளின் போதே இந்தச் சந்தேகநபர்கள் பிடிபட்டுள்ளனர்.

அதிரடிப்படையினரால் கடந்த சில தினங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்போது கடற்கரைப் பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 57 கடலாமை முட்டைகள் அவர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டன.

வனவிலங்கு இறைச்சிகள் ஒரு தொகை மற்றுமொரு சோதனையில் மீட்கப்பட்டன. இதில் 17 கிலோகிராம் மானிறைச்சி, 56 கிலோகிராம் காட்டு எருமை இறைச்சி மற்றும் 16 கிலோகிராம் மான் மற்றும் எருமையின் ஈரல் என்பன உள்ளடங்குகின்றன.

மேலும் கடல் வழியாக இந்த இறைச்சிகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பைபர் படகு, 25 குதிரைத்திறன் கொண்ட வெளிச்செல்லும் இயந்திரம் (Outboard engine) மற்றும் இரண்டு எரிபொருள் கொள்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

54 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0