உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கி கொள்ளை; நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஹிக்கடுவை பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தி, மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்ட சம்பவம் உட்பட பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரணை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்ட இரவுநேர சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையின் போதே, பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய பாரிய கும்பல் குறித்து தகவல்கள் வெளியாகின.

இதனடிப்படையில் திப்பட்டுகொட, ஹொரணை, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்த ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

ஹொரண நவம் மகா பெரஹர (ஊர்வலம்) தினத்தில், ஹிக்கடுவை பகுதியில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மன்னா கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திய இந்த கும்பல், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொள்ளையிடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் புலத்சிங்கள பகுதியில் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன் பல கைத்தொலைபேசிகளும் பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கொள்ளையிட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து, ஹேனேகம, கஹதுடுவ, கும்புக மற்றும் கோனபல ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

73 0 0