உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கிண்ணம்: இந்தியா ஏ அணி மீண்டும் சம்பியன்.!

47 பார்வைகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ரைசிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பேங்கொக்கில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான இந்தியா ‘A’ அணி மற்றும் பங்களாதேஷ் ‘A’ அணி மோதின.முதலில் துடுப்பாடிய இந்தியா ‘A’ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 134 ஓட்டங்கள் பெற்றது.

அதிகபட்சமாக தேஜல் ஹசாப்னிஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார். கேப்டன் ராதா யாதவ் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் சேர்த்தார்.பங்களாதேஷ் ‘A’ அணியின் பந்து வீச்சில் ஃபஹிமா கதுன் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.


135 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் ‘A’ அணி 19.1 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் சார்பில் ஷாமினா சுல்தானா 20 ஓட்டங்களும்சர்மின் சுல்தானா 18 ஓட்டங்களும், ஃபஹிமா கதுன் 14 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்தியா ‘A’ அணியின் பந்து வீச்சில் பிரேமா ராவத் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

சோனியா மெந்தியா மற்றும் தனுஜா கன்வர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.இறுதியில் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ‘A’ அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0