உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

54 பார்வைகள்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை இங்கிலாந்து அணிகள் நேற்று பலபரீட்சை நடத்திய நிலையில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.ஐசிசிஇருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்றுள்ள முதல் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் நேற்று பிற்பகல் ஆரம்பமானது

பிற்பகல் 3.00 மணிக்கு கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.இங்கிலாந்து அணி சார்பில் பில் சோல்ட் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும், மகேஷ் தீக்‌ஸன 2 விக்கெட்டுக்களையும், டில்சான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதன்படி 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0