உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுப்பர் எட்டு சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா.!

47 பார்வைகள்

இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடைத்திவரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் நேற்று இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதியிருந்தனஅதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அஹமதாபாத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 63 ஓட்டங்களையும், டேவிட் பிராவிஸ் 45 ஓட்டங்களையும், திரிட்ஸ்டன் ஸ்டப்ஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இந்நிலையில் 188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 76 ஓட்டங்களால் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0