உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ரயிலுடன் கப் ரக வாகனம் மோதி கோர விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘காலி குமாரி’ கடுகதி ரயிலுடன் கப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் பயாகலை பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ரயிலுடன் மோதிய கப் வாகனம், தண்டவாளத்தில் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்குள்ளான வாகனம் அருகில் உள்ள கட்டுமானத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ரயில் கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு நீண்டகாலமாகச் சரியாக இயங்கவில்லை எனவும், அங்கு முறையான பாதுகாப்பு கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சமிஞ்சை விளக்குகள் சரியாகச் செயற்படாததே விபத்துக்கான பிரதான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து காரணமாக இன்று காலை கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சில மணிநேரம் வரை தாமதமடைந்தது.

சம்பவம் தொடர்பில் பயாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0