உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாய்ச்சவடால் விடுவதை விடுத்து முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களிலும் ஆளுங்கட்சி வெற்றி பெறும் என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து கயந்த கருணாதிலக எம்.பி. ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,
“அரசு ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளேயே மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு சரிந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் வடக்கு, கிழக்கில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது வெறும் பகற்கனவு மாத்திரமே.

தேசிய மக்கள் சக்திக்கு உண்மையாகவே மக்கள் செல்வாக்கு இருந்தால், தேர்தலை நடத்த ஏன் அஞ்ச வேண்டும்? உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்துவோம் என்று இழுத்தடிப்புச் செய்யாமல், உடனடியாக ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்தி மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குகிறார்கள் என்பதைப் பார்க்குமாறு சவால் விடுகின்றோம். சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0