உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தல் உறுதி; வடக்கு, கிழக்கிலும் திசைகாட்டியே வெற்றிவாகை சூடும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு நிச்சயமாக நடத்தும் என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாம் பாரிய வெற்றியைப் பெறுவோம்.” – என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை முன்னெப்போதையும் விட தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் கூறுகின்றேன். எமது அரசுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மாகாண சபைத் தேர்தலின் போது வெளிப்படையாகத் தெரியவரும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்தவுடன், உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் அறிவிக்கப்படும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் எமது மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால், அங்கேயும் எமது கட்சியே வெற்றி பெறும்.” – என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0