உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இந்திய நிதியுதவியுடன் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் நன்றி தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இந்திய அரசின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா. வேதநாயகன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சத்யஞ்சல் பாண்டே (இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர்) மற்றும் சாய்முரளி (யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல்) ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், இந்திய நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி, காரைநகர் படகுத் தள அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடருக்குப் பின்னான உதவித் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் “அயலவருக்கு முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் விளக்கமளித்தார்.

சில கடனுதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.டித்வா பேரிடரின்போது இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்ததுடன், தொடர்ச்சியான பங்களிப்புகளையும் பாராட்டினார். இந்திய நன்கொடையின் கீழ் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பான தகவல்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.


பலாலி விமான நிலைய முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசு விசேட கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கால விரிவாக்க நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்கத் தயார் என பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக, கொள்கை நிலைப்பாடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் இந்திய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0