உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி: காரணமான இருந்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் – வேந்தன் கண்டனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லையைத் தாங்க முடியாமல், முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று கடனை அடைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடனைச் செலுத்திய பின்னரும், சம்பந்தப்பட்ட கந்துவட்டி கும்பல் தொடர்ந்து பணம் கோரி மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,“தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கும் எதிராக தமது இளமைக் காலத்தை முழுவதும் அர்ப்பணித்த முன்னாள் போராளிகள், இப்போது குடும்ப வாழ்க்கையில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அன்றாட வாழ்வாதாரச் சுமையை தாங்கும் அளவுக்கு வருமானம் இல்லாத காரணத்தால், பலர் கடன் மற்றும் சீட்டு போன்ற வழிகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலையைச் சுரண்டி, வட்டி மேல் வட்டி விதித்து ஏமாற்றும் கந்துவட்டி கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன.

அதன் விளைவாகவே, மண்ணுக்காக போராடிய இந்தப் பெண் போராளி தனது சிறுநீரகத்தை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவமாகும்.கவலைக்குரிய விடயம்விடயம் என்னவென்றால், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்துவட்டி கும்பலும் கைது செய்யப்படவில்லை. மாறாக, வறுமையால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியையே சமூகத்தின் ஒரு பகுதி விமர்சித்து வருகின்றது.

கடன் தொல்லையால் தமிழர் பகுதிகளில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது ஒரு பெண்ணுக்கே நேர்ந்த துயரம் அல்ல; ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நேர்ந்த அவலமாகும்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த ஜனநாயக நாட்டில் கந்துவட்டி நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி, கந்துவட்டி இல்லாத நியாயமான சமூகத்தை உருவாக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக தமிழ்தேசிய மக்கள் கூட்டணி இணைத் தலைவராகவும் செயல்படும் வேந்தன், முன்னாள் போராளிகளின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரிதமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0