உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டுக – அனுஷ பல்பிட்ட காட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முன்னாள் தலைவருமான அனுஷ் பல்பிட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் நேற்று பிணையில் விடுவித்தது.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அவர் கூறியது:


“தற்போதைய அரசில் எவ்வித திட்டமிடலும் இல்லை. அனுபவமிக்க அரச அதிகாரிகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பையும் அரசு சீர்குலைத்துள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது.எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை.

சட்டத்தின் மீதும் நீதிமன்றத்தின் மீதும் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.பழைய சம்பவங்களை கிளறிப் பார்ப்பதை விட, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை காப்பாற்றும் வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பழிவாங்கும் அரசியலால் நாட்டை முன்னேற்ற முடியாது,” என அனுஷ பல்பிட்ட வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0