உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி இலங்கையில்: பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து உயர்மட்டச் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி, நேற்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்து கலந்துரையாடினார்.இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.


குறிப்பாக, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளைப் பிரதி அமைச்சர் பாராட்டினார். அமெரிக்க விமானப்படையின் 36-வது அவசரக்கால பதிலளிப்பு குழுவின் மூலம் இரண்டுC-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களும் விமானப்படை வீரர்களும் பயன்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து உதவிகள், இலங்கையின் மீட்புப் பணிகளில் முக்கிய பங்காற்றியதாக அவர் தெரிவித்தார்.


மேலும், இத்தகைய அவசரநிலைகளை ஒரு திருப்புமுனையாகக் கொண்டு சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். இதன் அடிப்படையில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட நான்கு கடலோர பாதுகாப்புகப்பல்கள், பீச்கிராப்ட் கிங் எயார் விமானம், ‘பிளீட் பிராட்பேண்ட்’ (FleetBroadband) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மற்றும் 10 பெல் TH-57 பயிற்சி ஹெலிகள் ஆகியவற்றின் பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்தார்.


இதற்கு பதிலளித்த அட்மிரல் கோஹ்லர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் இன்று சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.இறுதியாக, இந்தோ–பசுபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் போது, நாடுகளின் இறையாண்மையை மதிப்பதே மிகவும் முக்கியமானது என்ற கருத்தில் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.


நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற அட்மிரல் கோஹ்லர், 2024 ஏப்ரல் 4ஆம் திகதி அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவர் தலைமைத்துவம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0