உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இந்திய விஜயம் மட்டும் போதாது: மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வருகின்றமை மட்டும் போதுமானதல்ல எனவும், நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


“இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அந்த அடிப்படையில் ஜனாதிபதியின் தற்போதைய இந்திய விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும், இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயபூர்வமான பேச்சுவார்த்தைகளுடன் மட்டுப்படக் கூடாது.

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதே இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. தற்போது நீண்டகாலமாக செயலிழந்த நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி, நாட்டில் ஜனநாயக ஆட்சியமைப்பை மீண்டும் வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கே உண்டு.


எனவே, இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளைத் தாண்டி, உள்நாட்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

57 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

53 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

65 0 0