உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய சிம்பாப்வே!

61 பார்வைகள்

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B இல் முதலிடத்தைப் பிடித்தது.இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்திருந்திருந்த நிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இதில், 2024 இல் நடந்த இறுதி டி:20 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறாத சிம்பாப்வே, மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் 179 ஓட்டங்கள் என்ற சிறந்த சேஸை முடித்த பின்னர் நடப்பு டி:20 உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாத அணியாக மாறியது.நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள‍ை எடுத்தது.இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க 41 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார்.அவருக்கு அடுத்தபடியாக பவன் ரத்நாயக்க 25 பந்துகளில் 44 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் முசரபானி, பிராட் எவன்ஸ் மற்றும் கிரேம் க்ரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இவர்கள் தவிர ரியான் பர்ல் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியானது 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 182 ஓட்டங்கள‍ை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ராசா தெரிவானார்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இலங்கை அணியானது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.

இந்தப் போட்டி கண்டி, பல்லேகலவில் நடைபெறும்.அதேநேரம், அடுத்த திங்கட்கிழ‍ை (23) நடைபெறும் போட்டியில் சிம்பாப்வே, மேற்கிந்தியத்தீவுகளை எதிர்கொள்ளும்.இந்தப் பேட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0