டி20 உலகக் கிண்ணம்: அவுஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி.!
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண தொடர் 30 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்றிரவு 07:00 மணிக்கு பல்லேகல, கண்டி மைதானத்தில் மோதுகின்றன. தொடரில் இலங்கை அணி தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்று சிறந்த ஃபார்மில் உள்ளது; அயர்லாந்தை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஓமானை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
மறுபுறம், ஆஸ்திரேலியா அணி தமது ஃபார்மை திரும்ப பெற போராடி வருகிறது. ஆரம்ப ஆட்டத்தில் அயர்லாந்தை வெற்றி பெற்ற பின்னர், சிம்பாப்வேக்கு எதிராக 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே இன்றைய இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.அதே நேரத்தில், இன்று நடைபெறும் 29 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 03:00 மணிக்கு மோதுகின்றன.