உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்!

55 பார்வைகள்

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சஞ்சு சம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகத்தின் ஒரு பகுதியாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இரண்டு பேர் சென்னை அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.24 வயதான பராக் ஏற்கனவே ராஜஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவராவார்.கடந்த ஆண்டு சஞ்சு சம்சன் காயத்தினால் எட்டு போட்டிகளில் விளையாடாதபோது, பராக் அணியை வழிநடத்தியிருந்தார்.

அந்த 8 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது.இருப்பினும், தலைவராக பராக் 38.57 என்ற சிறந்த சராசரியைக் கொண்டிருந்தார்.ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் 95 ஓட்டங்களை எடுத்தமையே அவரது ஐபிஎல் வாழ்க்கையின் சிறந்த ஓட்ட பரிதியாக காணப்படுகின்றது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் மாற்றத்துடன் இம்முறை களமிறங்கவுள்ளது.அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ராகுல் ட்ராவிட் விலகியதை அடுத்து, குமார சங்கக்கார ராஜஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0