உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 11.02.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் முயற்சி தேவை. எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு சுலபமாக எளிதாக இன்று உங்களால் சாதிக்க முடியாது. அதற்காக சோர்ந்து போய் துவண்டு போய் உட்காரவும் கூடாது. முயற்சி, விடா முயற்சி உங்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும். கூடவே இறை நம்பிக்கையும் இருக்கட்டும். நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வுதான். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வெற்றி வாகை சூடுவீர்கள். புது நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். வாழ்க்கை இனிக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக எந்த தொந்தரவும் இருக்காது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர், புகழ் உயரக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நூற்றுக்கணக்கான யோசனைகள் மனதில் இருந்தாலும், ஒரு சின்ன அமைதி இன்று உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும். இதமான அனுபவங்கள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு செயல்பட வேண்டும். ஒரு நல்லது நடந்தால், அந்த நல்லது எதற்காக நமக்கு நடந்தது என்று ஆயிரம் முறை சிந்திப்பது கிடையாது. அதே போல தான் ஒரு கெட்டது நடக்கும் போதும் அதைப்பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த வேலையை பார்ப்பது நல்லது. மனதை அலைபாய விடக்கூடாது. நடந்த கஷ்டத்தை எண்ணி வருத்தப்படக்கூடாது. உங்களுடைய கடமையில் தவறாமல் நடந்து கொள்ள வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய சாதனை படைப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். உங்களுக்கான நல்லது உங்களை நிச்சயம் தேடி வர போகிறது. பல நாள் கவலைகள் மறக்க போகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நேரத்தை வீணடிக்காதீர்கள். எல்லா பிளானையும் முன்கூட்டியே போட்டு வைத்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம். அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். தன் கையே தனக்கு உதவி என்பதை இன்று நீங்கள் மறக்கக்கூடாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். வேலை, வியாபாரம் சாப்பாடு தூக்கம் என்று எல்லாம் நேரத்திற்கு நடக்கும். பெரிதாக பிரச்சினைகள் இல்லை. நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். நிதி நிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாக வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எதுவாக இருந்தாலும் எதிர்த்து போராடுவீர்கள். எல்லா விஷயத்தையும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற தைரியம் வெளிப்படும். யாரை கண்டும் பயப்பட மாட்டீர்கள். இந்த நாள் கடவுள் உங்களுக்கு துணையாக இருக்கப் போகின்றார்.‌ எதற்கும் கவலைப்படாதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சினைகள், சின்ன சின்ன தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரியால் பிரச்சினை, உடன் வேலை செய்பவரால் பிரச்சினை, குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினை என்று, பிரச்சினை எந்த ரூபத்தில் வந்தாலும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நாள் இன்று.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். உங்களோடு இருப்பதெல்லாம் உங்களுக்கு நல்லது செய்யக் கூடியவை, உங்களை விட்டு விலகி சென்றதெல்லாம், உங்களுக்கு கெடுதல் செய்வதற்காக காத்துக் கொண்டிருந்த விஷயங்கள் என்று இந்த நாளை பாசிட்டிவா எடுத்துப்பீங்க.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யோகம் நிறைந்த இந்த நாளில் உங்களை எதிர்த்து போட்டி போட்டு ஜெயிப்பதற்கு யாராலும் முடியாது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நீண்ட நாள் கனவு நினைவாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். எதிரி தொல்லை இருக்கும். உயர் அதிகாரிகளுடைய பிரஷரை கொஞ்சம் தாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். எதற்கும் கவலைப்படாதீர்கள். குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். இறைவனின் அருளால் நிச்சயம் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0