உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 10.02.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கௌரவம் உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். இதுநாள் வரை வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை என்று வருத்தப்பட்டவர்களுக்கு கூட இன்று நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது. வரக்கூடிய வாய்ப்புகளை விடாதீர்கள், சின்ன நூல் கிடைத்தாலும் அதை பிடித்து முன்னேறும் வழியை பாருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். கை நிறைய பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வரும் மகாலட்சுமியை திறமையாக சேமித்து வைத்துக் கொள்ள பாருங்கள். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. பிள்ளைகளுடைய எதிர்கால நலனில் அக்கறை காட்டுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உற்சாகம் இருக்கும். பெரிய அளவில் வரவிருத்த பிரச்சினையை கூட, சுலபமாக எதிர்கொண்டு பிரச்சினை இல்லாமல் செய்து விடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் அமையும். மன நிம்மதி கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீண்ட நாள் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கு. உற்சாகத்தோடு இருப்பீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பல நல்ல விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தையும் விரிவுபடுத்தலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர் பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முதியவர்கள் இன்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். மற்றபடி வேலை வியாபாரம் நிதிநிலைமை எல்லாம் சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். புது முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் இன்று பொறுமை காப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் எந்த அவசரமும் இருக்கக்கூடாது. நிதானம் மட்டும் தான் இன்று உங்களை நல்வழிப்படுத்தும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பரிசுகள் கிடைப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கு. இலாபம் நிறைந்த நாள் இன்று. வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். எதிரிகள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். உயர் அதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வருமானம் உயரும் சேமிப்பு உயரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். இந்த நாள் சாந்தமான நாளாக இருக்கும். பிரச்சினைகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபட உங்களுடைய மௌனமே காரணமாக இருக்கும். பேச்சை குறைத்து வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். பாராட்டும் புகழும் உங்களுக்கு கிடைக்கும். அமைதியாக இருந்து சாதிக்கக்கூடிய நாள் இன்று.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த வேலைகள் எல்லாம் நினைத்த நேரத்தில் சரியாக நடக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் தேடி வரும். கை நழுவி விடாதீர்கள். நண்பர்களுடைய உதவி உறவினர்களின் உதவி மனதிற்கு ஆறுதலாக இருக்கும். குடும்பம், பிள்ளைகள் என்று இந்த நாள் சந்தோஷமாக நகர்ந்து செல்லும். கவலைகள் வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். சிந்தனை மேலோங்கும். எதிர்காலத்தை எப்படி சமாளிப்பது என்று கொஞ்சம் கஷ்டம் இருக்கும். இருந்தாலும் நிறைய யோசித்து இன்றைக்கான வேலைகளை கைநழுவ விடாதீர்கள். எதிர்காலத்தை கடவுள் பார்த்துக் கொள்வான். இன்றைக்கான வேலையில் கவனம் செலுத்துங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது சின்ன தடுமாற்றம் இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். கவலை வேண்டாம். கடமையிலிருந்து தவறாமல் இருங்கள். கடவுள் நிச்சயம் உங்களை நல்வழிப்படுத்துவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0