உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 06.02.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூலாகும். நிதி நிலைமை உயரும். சில பேருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பீர்கள். வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இன்று நிறைவாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லது நடக்கும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. கட்டுப்பாடுகள் தேவை. அனாவசியமாக கோபப்படக்கூடாது. கோபத்தால் நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புகள் உள்ளது. செல்லும் இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். ஏதோ ஒரு வகையில் இன்று நீங்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனதில் மகிழ்ச்சி இருக்கும். உற்சாகத்தில், சந்தோஷத்தில் நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் கவன குறைவு வேண்டாம். எவ்வளவு முன்னேற்றம் வாழ்க்கையில் இருந்தாலும் கடமையில் தவறாமல் நடந்து கொள்ளுங்கள். நேர்வழியில் நடந்து கொள்ளுங்கள். எந்த விஷயமாக இருந்தால் சரி, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இன்று நீங்கள் மறக்கக்கூடாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவதில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வியாபாரத்திலும் வேலையிலும் படு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோகம் இருக்கும். கொஞ்சம் துன்பங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த பிரச்சினையைக் கண்டும் பயப்படக் கூடாது. மனவருத்தப்படக் கூடாது. எதிர்த்துப் போராடி ஜெயிக்க கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு தேவை. நம்பிக்கையுடன் இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி கிடைக்கும். எதிரி தொல்லை நீங்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். செய்த தவறுக்காக வருத்தப்படுவீர்கள். பிடித்தவர்களிடம் இதனால் வரை இருந்த ஈகோவில் இருந்து விடுபட்டு, மனது விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள். ஒன்று சேரும். கணவன் மனைவி ஒற்றுமையால் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து பேசுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீது இருந்த களங்கம் விலகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் திறமை வெளிப்படும் நாள் இன்று.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எளிதில் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. பல சிரமங்களுக்கு பின்பு தான் வெற்றி உங்களை வந்து சேரும். ஆகவே இன்று விடாமுயற்சி உங்களுக்கு தேவை. விடாமுயற்சி நிச்சயம் விஸ்வரூப வெற்றியை தேடி தரும். சோம்பேறித்தனம் கூடாது. இன்றைக்கான வேலையை, நாளை செய்து கொள்ளலாம் என்று யோசிக்கவே கூடாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானமான நாளாக இருக்கும். கோவத்தில் இருந்து விடுபடுவீர்கள். சாந்தமாக இந்த நாளை கடந்து செல்வீர்கள். அடுத்தவர்களுடைய பேச்சுக்கும் செவி சாய்ப்பீர்கள். சிந்தனைகள் மேலோங்கும். இந்த நாள் மனநிறைவு கிடைக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். விவசாயிகளுக்கு இருந்து வந்த நஷ்டம் எல்லாம் இலாபமாக மாறும். சேமிப்பு உயரும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0