உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 04.02.2026

ராசி பலன்கள் 8 மாதங்கள் முன்
80 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். இதை செய்தால் நமக்கு சரியாக வருமா, இதை செய்யாமல் இருந்தால் நல்லதா, என்ற ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதிற்குள் இருக்கும். எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் நம்பிக்கை, தைரியம், நேர்வழி இருந்தால் போதும். உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. குழப்பத்திலிருந்து விடுபட்டு இந்த நாளை கடந்து செல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம் இன்று வந்து சேரும். சொத்து சுகம் வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை இரண்டு மணி நேரம் செய்வீர்கள். இதனால் நேர பற்றாக்குறை அலைச்சல் வருவதற்கு வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது. கவனமாக செயல்படவும். நேரத்தை வீணடிக்க கூடாது பாத்துக்கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வீண் விரைய செலவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். முடிந்தால் யாருக்காவது இயலாதவர்களுக்கு நீங்களே ஒரு உதவியை செய்து விடுங்கள். வீண் விரைய செலவு வராமல் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் பிரச்சினை இல்லை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேறுவதற்கு நீங்கள் அடுத்தவர்களிடம் கேட்ட உதவிகள் எல்லாம் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விளம்பரங்கள் செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த நாள் இனிய நாளாக இருக்கிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் நீண்ட நாட்களாக செய்யாமல் வைத்திருந்த வீட்டு வேலைகளை எல்லாம் இன்று செய்து முடிப்பீர்கள். பழுது போன பொருட்களை சரி செய்வீர்கள். இந்த நாள் மனதிருப்தி கொடுக்கக்கூடிய நாளாக அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். பக்குவம் வெளிப்படும். முன்கோபம் குறையும். உங்களுடைய தவறை நீங்களே புரிந்து கொள்வீர்கள், செய்த தவறை, சரி செய்து கொள்வீர்கள். யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டு மனபாரத்தை குறைத்துக் கொள்வீர்கள். இந்த நாள் இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் வீடு தேடி வரும். நீங்கள் தவறாக ஏதாவது ஒரு வேலை செய்தாலும், அந்த வேலையின் இறுதியில் உங்களுக்கு கிடைப்பது நன்மையாக இருக்கும். ஆகவே இந்த நாள் கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்யப்பட்ட நாள். முன்கோபம் வேண்டாம், அவசரம் வேண்டாம், அடுத்தவர்களை ஏளனமாக பேசாதீர்கள். நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. இந்த நாளை கொஞ்சம் பக்குவமாக கடந்து செல்ல வேண்டும். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புது முயற்சிகள் வேண்டாம். நீண்ட தூர பயணம் வேண்டாம் அதிகமாக செலவும் செய்ய வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் இருந்து தெளிவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். என்ன முடிவை எடுப்பது என்ன முடிவு எடுக்கக் கூடாது என்று தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள் எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். பிடிக்காத இடத்திலிருந்து விலகி நிற்பீர்கள். வம்பு சண்டைக்கு போக மாட்டீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நேர்மையான நாளாக இருக்கும். குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டீர்கள். உங்களுடைய பேச்சு ரொம்பவும் தெளிவாக இருக்கும். அடுத்தவர்களுடைய முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். நிதி நிலைமையில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருக்கும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0