உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 02.02.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன சிக்கல்கள் வந்து போகக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. புது மனிதர்களை சந்திக்கும் போது கவனம் தேவை. எல்லோரையும் அப்படியே முழுமையாக நம்பி விடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நண்பர்கள், உறவினர்களுடைய பங்களிப்பு உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தன்னடக்கம் தேவை. பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. அவமானப்படுத்தி பேசக்கூடாது. வார்த்தையில் கவனம் தேவை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ஒரு சின்ன ஏமாற்றத்தை கொடுக்கும். பெரிய அளவில் எந்த விஷயத்திலும் எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லதை இறைவன் நிச்சயம் நடத்தி வைப்பான். ஏமாற்றத்தில் மனசு ஒரு போதும் துவண்டு போகக்கூடாது. இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த நஷ்டங்கள் இலாபகரமாக அமையும் நாள் இன்று.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவு அதிகரிக்கும். கைக்கு வந்த பணம் முழுவதும் கரைந்து போக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முழு கவனம் தேவை. ஆடம்பர வாழ்க்கை வேண்டாம். அடுத்தவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்து உங்கள் வாழ்க்கையை ஒரு போதும் மாற்றிக் கொள்ளக்கூடாது. கவனம் தேவை இன்று.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் செய்யாத வேலையை கூட, நீங்கள் தான் செய்தீர்கள் என்று பாராட்டு மழையை கொட்டப் போகிறார்கள். பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் நல்ல பலன் உண்டு. படாத கஷ்டத்திற்கும் பலனை இறைவன் உங்களுக்காக கொடுக்கப் போகின்றான்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று சின்ன மனக் கவலையோடு இருப்பீர்கள். எதையோ இழந்தது போல மன கஷ்டம் இருக்கும். பழைய கஷ்டங்களை எல்லாம் நினைத்து மனதை வீணடிக்காதீர்கள். உங்களுடைய கடமையை சரியாக செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும் நாள் இன்று.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இறைவழிபாட்டில் மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுப செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கிக் கடன் முயற்சி செய்யலாம். விவசாயம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் பல நடக்கும். வருமானம் பெருகும். வேலையிலும் வியாபாரத்திலும் மன திருப்தி உண்டாகும். உங்களுடைய கனவுகள் இன்று நினைவாக கூடிய நாள். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இரவு நிம்மதியான தூக்கமும் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன மன பயம் இருக்கும். எதிர்கால வாழ்க்கையை எண்ணி கவலைப்படுவீர்கள். சிந்தனைகள் மேலோங்கும் நாள். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0