உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 28.01.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கூடுமானவரை ஆடம்பர வாழ்க்கையை தவிர்ப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்தவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை அதிகமாக வெளி ஆட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். ஒரு பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடந்து கொள்வது நல்லது. இளைஞர்கள், மாணவர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் எப்பவும் போல இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டு, பெயர், புகழ், அந்தஸ்து உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். நேரத்தை அனாவசியமாக செலவு செய்ய மாட்டீர்கள். அவசியத்தை புரிந்து வேலைகளை முடித்து விடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். சில பொருட்கள் திருட்டுப் போக வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளோடு பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். அவசர முடிவால் சில பல நல்ல விஷயங்களை இழக்க வாய்ப்புகள் உள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணம் வெளிப்படும். உங்களுடைய எதிரிகளை மனநிறைவோடு மன்னித்து விடுவீர்கள். பிரச்சினையில் இருந்து சுலபமாக விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்து சந்தோஷம் அடைவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். குடும்பத்தோடு இந்த நாளை மகிழ்ச்சியாக கடந்து செல்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். விருந்தாளிகளின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். மன நிறைவான இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். முன்கோபம் வேண்டாம். அவசர முடிவு வேண்டாம். வார்த்தையில் கவனம் இருக்கட்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான தீர்வை நாளை தேடுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த நல்ல காரியங்கள் இன்று நடக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவுகள் இருக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும் இந்த நாள் இனிய நாள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த சின்னச் சின்ன தடைகள் தடங்கல்கள் வந்து போகும். பிரச்சினைகளை கண்டு நீங்கள் பயப்படக்கூடாது. உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். பொய் சொல்லாதீர்கள். நேர்வழியில் இருந்து குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். கடவுள் உங்களுக்கான நல்லதை கொடுப்பான்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு, பாசம், காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த சிக்கல் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது உங்களை தேடி வரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0