உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விஜயின் ‛ஜனநாயகன்’ டிரைலர் வெளியீடு!

சினிமா 9 மாதங்கள் முன்
84 பார்வைகள்

வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2 நிமிடம் 52 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலர் முழுவதும் ஆக்‌ஷன், கமர்ஷியல் அம்சங்கள் மற்றும் அரசியல் கருத்துக்களால் நிறைந்ததாக அமைந்துள்ளது. விஜய் இதில் ‘வெற்றி’ என்ற பெயருடைய காவல் அதிகாரியாகவும், அன்பான தந்தையாகவும் நடித்துள்ளார். அவரின் மகளாக மமிதா பைஜு நடித்துள்ளார்.வில்லனாக பாபி தியோல் நடிக்கும் நிலையில், அவரது கும்பலால் மமிதாவுக்கு பிரச்சினை ஏற்பட, அதனை எதிர்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வதாக விஜய் களமிறங்குகிறார் என்பதே படத்தின் மையக் கதையாக தெரிகிறது.

இதனுடன் நாட்டின் பாதுகாப்பு, அரசியல்வாதிகளின் ஊழல் போன்ற விடயங்களும் படத்தில் முக்கியமாக பேசப்படுகின்றன.டிரைலரில் விஜய், மமிதா பைஜு, பாபி தியோல், அரசியல்வாதி வேடத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பிரதானமாக தோன்றுகின்றனர். பிரியாமணி, பூஜா ஹெக்டே, நாசர், நரேன் ஆகியோரும் சில காட்சிகளில் இடம்பெறுகின்றனர். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் மறுஆக்கம் (ரீமேக்) என கூறப்படும் நிலையில், அந்தப் படத்துடன் தொடர்புடைய பல அம்சங்கள் இதில் காணப்படுவதாக டிரைலர் சுட்டிக்காட்டுகிறது.

“தளபதியை தொட்டுறாதே ஸ்லைஸ் போட்டு விடுவேன்… நான் சாதாரண மனிதன் தான், ஆனா செய்கிற காரியம் சூப்பராக இருக்கும்… உன்னை காலி பண்ணிடுவேன், அசிங்கப்படுத்திடுவேன் என்று சொல்வவன் யாராக இருந்தாலும் சரி, திரும்பிப் போகும் ஐடியாவே இல்லை, ஐயம் கம்மிங்… மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரச் சொன்னால், கொள்ளையடிக்கவும் கொலை செய்யவுமா அரசியலுக்கு வருகிறீர்கள்?” போன்ற விஜயின் மாஸ் பஞ்ச் வசனங்கள் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் முன்வைக்கும் அரசியல் விமர்சனங்கள், அவர் எதிர்கொள்ளும் அரசியல் சார்ந்த சவால்கள் ஆகியவை இந்தப் படத்தில் பல இடங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சாட்சியாக டிரைலரில் உள்ள வசனங்களே அமைந்துள்ளன.எது எப்படியிருந்தாலும், விஜயின் கடைசிப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மாஸ் என்டர்டெயினராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டிரைலர் வெளியான அரை மணிநேரத்துக்குள் தமிழில் மட்டும் 20 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதால், அந்த மொழிகளிலும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0