உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை!

சினிமா 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘பராசக்தி’. இந்த படத்தின் தலைப்பு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தின் தலைப்பு. தமிழ் சினிமாவில் காலத்திற்கும் அழிக்க முடியாத காவியமாக உள்ள இந்த படத்தின் தலைப்பை வைத்ததற்கு ஏற்கனவே பல விமர்சனங்கள் உள்ளது.தற்போது பராசக்தி படக்குழு சிவாஜி கணேசனை நினைவூட்டும் வழியில் அந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

இதற்கு சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் விளம்பரத்திற்கு சிவாஜியின் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்த நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை கண்டனம். தனியார் நிகழ்ச்சியில் தீ பரவட்டும் என்கிற வசனத்துடன் சிவகார்த்திகேயனுக்கு சிவாஜி தீ பந்தம் கொடுப்பது போன்ற படம் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்தவரின் உழைப்பில், பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என சிவகார்த்திகேயன் உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு நடிகர் திலகத்தின் வாரிசு என்ற ரீதியில் விளம்பரப்படுத்திக் கொள்ள யார் அதிகாரம், அனுமதி கொடுத்தது? மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என பராசக்தி படக்குழு உள்ளது என நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை கண்டன விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0