உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல நடிகர் மகள் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்பு!

சினிமா 9 மாதங்கள் முன்
73 பார்வைகள்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடைய மகள் ஹொட்டல் அறை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.Men in Black வரிசை திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஆஸ்கர் விருது வென்றவரான நடிகர் டாமி லீ ஜோன்ஸ் (Tommy Lee Jones).

டாமியின் மகள், விக்டோரியா ஜோன்ஸ் (34). புத்தாண்டு தினத்தன்று, அதிகாலை 2.52 மணியளவில் சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றிற்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.அங்கு விக்டோரியா சுயநினைவிழந்து கிடந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

விக்டோரியாவின் அறையில் அவருடன் யாராவது இருந்தார்களா, அவருக்கு என்ன உடல் நல பாதிப்பு என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

விக்டோரியா சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் ஒரு சிறந்த நடிகை என அவரது தந்தையான டாமி லீ ஜோன்ஸ் மகள் குறித்து பெருமையாக பேசுவதுண்டு.

விக்டோரியாவின் திடீர் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியுள்ள நிலையில், அது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

66 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

82 0 0
சினிமா

‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

தீரன் அருண்​கு​மார் இயக்கத்தில் வெற்​றி, பிரி​யால​யா, லிவிங்​ஸ்​டன், அபி​ராமி நடித்​துள்​ள ‘பிளாக் கோல்​டு’ படம் நவம்பர் 13ம் திகதி வெளியாகிறது. ‘எட்டு தோட்​டாக்​கள்’, ‘ஜீ​வி’ படங்​களில் நடித்​துள்ள…

73 0 0
சினிமா

நவம்பர் 20ஆம் திகதி வெளியாகும் ‘சத்தியவான் சாவித்திரி’

கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரவீன்…

66 0 0