உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடமாகாண ஆளுநரிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 32 நிமிடங்கள் முன்
33 பார்வைகள்

மன்னார் நகர சபை பிரிவிலுள்ள முன்பள்ளிகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு மன்னார் நகர சபையினால் ஒரு வருடத்திற்கு என மாதாந்த கொடுப்பனவாக ஒதுக்கியுள்ள நிதியை விடுவிக்க வடக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னார் நகர சபை பிரிவிலுள்ள 23 முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள் சுமார் 60 பேர் வரை இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) மன்னாரில் விசேட ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபையினால் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியை மன்னார் எல்லைக்கு உட்பட்டு இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு காலத்திற்கான கொடுப்பனவாக வழங்க மன்னார் நகர சபை தீர்மானித்திருக்கிறது.

இந்த தீர்மானம் தொடர்பாக எங்களுக்கு கடந்த மாசி மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எங்களுடைய வடமாகாண ஆளுநர் அவர்களால் தீர்மானம் புறக்கணிக்கப்பட்டு, தற்பொழுது இரண்டாவது பாதீட்டில் எங்களுக்காக கதைக்கப்பட்டு, எங்களது ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க வேண்டும் என தவிசாளர் அவர்களினால் கூறப்பட்டுள்ளது.

இந்த கிடைக்கப் பெற வேண்டிய நிதி உதவியானது பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் எங்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.

இந்த நிதி உதவி எங்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே இந்த நிதி உதவியானது எமது ஆளுநர் அவர்களின் ஒப்புதலின் கீழ் வர வேண்டி இருக்கின்ற காரணத்தினால், இந்த நிதி உதவியை எங்களது ஆளுநர் எங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்த முன்பள்ளி ஆசிரியர் சமூகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

25, 30 ஆண்டுகளையும் கடந்த ஆசிரியர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

மாகாண திணைக்களத்தினூடாக பெறுகின்ற 6 ஆயிரம் ரூபாய் மட்டும் அதுவும் பதிவில் உள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் கிடைக்கப்பெறுகிறது. ஏனையவர்களுக்கு பெற்றோரிடம் வாங்குகின்ற ஒரு சிறிய தொகையே கிடைக்கின்றது. வேறு எந்த கொடுப்பனவுகளும் எமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே, எங்களுக்கு இந்த மன்னார் நகர சபையினால் ஒதுக்கப்பட்ட ஒரு வருடத்திற்கான தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியினை ஆளுநர் எங்களுக்கு விடுவிக்க வேண்டும். இதனால் ஆசிரியர்களது காலம் பொற்காலமாக சிறப்பததோடு எதிர்வரும் காலங்களில் முன்பள்ளி சமூகத்தை நல்லதொரு சமூகமாக கட்டியெழுப்பவும் முடியும்.

எங்களுடைய பொருளாதாரம் எங்களை மேம்படுத்த வேண்டும். பொருளாதாரத்தால் நாங்கள் வீழ்ச்சி அடைந்து போகும் பொழுது தான் எங்களுக்கு நிறைய மன சேர்வுகள் ஏற்படுகிறது.

ஆகவே, இந்த மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டை ஆளுநர் அங்கீகரித்து எங்களுக்கு மிக விரைவாக பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மணி இடைக்கால அறிக்கை தொடர்பில் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடாத்தப்பட வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள நான்காவது இடைக்கால அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்ற…

23 0 0
இலங்கை செய்திகள்

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக…

24 0 0
இலங்கை செய்திகள்

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்.!

அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் உயிர்காப்பு, அவசரகால மீட்புச் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (27) வெள்ளிக்கிழமை நடைபெற்றன.…

41 0 0
இலங்கை செய்திகள்

வெள்ள அனர்த்தத்தில் உ**யிரிழந்தவர்களின் நினைவாக விசேட துஆப் பிரார்த்தனை.!

2024 நவம்பர் 26ஆம் திகதி காரைதீவு – மாவடிப்பள்ளிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட ஏழு பேரின் நினைவாக, அம்பாறை மாவட்ட…

40 0 0