உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி.!

இலங்கை செய்திகள் 44 நிமிடங்கள் முன்
71 பார்வைகள்

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.

நாட்டின் சட்டப் பொறிமுறைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பதை அவர் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நீதிமன்ற தண்டனைக்கு உட்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் முற்றிலும் நியாயமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பொன்றை எதிர்த்து வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவது நீதித்துறை சுயாதீனத்துக்குப் பாதகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நபர் அல்லது பதவி நிலைகளைக் கடந்து சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே என்பதை தற்போதைய அரசு உறுதியாக நம்புகின்றது என்று தெரிவித்த நீதி அமைச்சர், தவறு இழைத்தவர்கள் எவராக இருந்தாலும் சட்ட நடவடிக்கைகள் நடுநிலையாகவே முன்னெடுக்கப்படும் என்றார்.

நீதித்துறையின் முடிவுகளில் அரசியல் தலையீடுகளுக்கோ அல்லது வெளி அழுத்தங்களுக்கோ இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சட்டத்தின் மேலாதிக்கத்தை மதிப்பதே நாட்டின் ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு உறுதுணையாக அமையும் என்று குறிப்பிட்ட அமைச்சர், சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக அழுத்தங்களைப் பிரயோகித்து நபர்களை விடுவிக்கக் கோருவது நாட்டின் சட்ட ஒழுங்குக்குச் சவாலாக அமையும் என்றும் தெரிவித்தார்.

எனவே, குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய நியாயமற்ற போராட்டங்களைக் கைவிட்டு, நாட்டின் நீதித்துறைக்கும் சட்ட கட்டமைப்புக்கும் மதிப்பளித்துச் செயற்படுமாறு அனைத்து தரப்பினரையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குத்துச் சண்டைப் போட்டி; வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாவட்டங்களுக்கிடையில் மாகாண ரீதியாக பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட…

72 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த மகா சங்கத்தை அவமதிக்கும் ஜனாதிபதி; மஹிந்தவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச்…

67 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலை மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

சடலத்தை உரிய முறையில் பாதுகாக்காமல், அடிப்படை வசதிகளற்ற இடத்தில் வைத்திருந்ததாக அச்சுவேலி வைத்தியசாலை நிர்வாகம் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…

77 0 0
இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெதகமை பிரதேசத்தைச்…

88 0 0