உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களின் அடிப்படை உரிமைகளை மிதித்துத் துவைக்கும் அநுர அரசு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
77 பார்வைகள்

அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே அரசுக்கு மக்கள் ஆணை கிடைத்த போதிலும், அதற்கு மாறாகப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகளையே இந்த அரசு தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“விகாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் தலைமையில் மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றமை அரசமைப்பின் 14 ஆம் பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும்.

இந்த உரிமையைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று, நாகரிகமற்ற முறையில் அவர்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பேச்சுச் சுதந்திரத்தையும் ஒன்றுகூடும் சுதந்திரத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம்’ என்பன நிறைவேற்று அதிகாரத்துக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகின்றன.

குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வரைவுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கட்டாய விளக்கமறியல் மற்றும் பிணை வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் மனித உரிமைகளை மீறுகின்றன.

புதிய சட்டங்களின்படி, அனுமதியின்றி பாடும் இளம் இசைக்குழுவினர் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் இளைஞர்கள் கூட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாகக் சித்திரிக்கப்படும் அபாயம் உள்ளமையால், தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும்.

80 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் 16 ஆயிரம் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு மீறிவிட்டது. அவர்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும்.” – என்றார்.

அத்துடன், புதிய விசர்நாய்க்கடி எதிர்ப்புச் சட்டமூலத்தில் காணப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், சுகாதார மற்றும் கால்நடை மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்துச் சரியான பொறிமுறையை முன்னெடுக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

77 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

73 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

84 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப்…

58 0 0