உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமலைச் சிறை வைத்தாலும் மொட்டு ஒருபோதும் முடங்காது.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
78 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், சிறையிலிருந்தவாறே அவசியமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றமையால் கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்துவிட்டது, ஏற்பாட்டுச் சக்தியை இழந்துவிட்டது எனச் சில கட்சிகளும் நபர்களும் நினைக்கலாம்.

நாமல் ராஜபக்ஷ சிறையில் இருந்தாலும் தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களைக் கட்சியின் செயலாளர் உட்பட அனைவருக்கும் வழங்குகின்றார்.

தொகுதி மட்டத்தில் அடுத்த வாரம் முதல் நடைபெறும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷ பங்கேற்காவிட்டாலும், எமது கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். எனவே, நாமலைச் சிறையில் அடைத்தால் கட்சி வீழ்ந்துவிடும் என எவரும் நினைக்கக்கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான பொதிகள் கைப்பற்றல்.!

காலி, தலல்ல கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பல பொதிகள் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து இன்று…

77 0 0
இலங்கை செய்திகள்

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாண அணி இரண்டாம் இடம்.!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. அகில இலங்கை கணிதப் போட்டி –…

73 0 0
இலங்கை செய்திகள்

34 அரச நிறுவனங்களுக்கு மூடுவிழா.!

காலத்துக்குப் பொருத்தமற்ற மற்றும் செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கும், சிலவற்றை ஒன்றிணைப்பதற்கும் நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பத்தரமுல்ல வோட்டர்ஸ்…

84 0 0
இலங்கை செய்திகள்

அனுராதபுரம் புனித பூமியின் அபிவிருத்தித் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி.!

அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பு மற்றும் புராதன மதப் பின்னணியைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப்…

58 0 0