உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

வடக்கில் திலீபனுக்குச் சிலை அமைத்தமை இராணுவத்தை அவமதிக்கும் செயல்! – சரத் வீரசேகர ஆவேசம்!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
36 பார்வைகள்

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் ஒரு செயலாகும் எனக் குறிப்பிட்ட முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, எதிர்காலத்தில் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க அரசு அனுமதியளிக்குமா எனச் சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகள் தற்போது வெளிப்படையாகவே வெளிப்படுத்தப்பட்டு வருவதுடன், பௌத்த சின்னங்களும் மரபுரிமைகளும் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன.

வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டு உருச்சிலை அமைக்கப்பட்டுள்ளமை இராணுவத்தை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறான சூழலில், எதிர்காலத்தில் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த அரசு அனுமதியளிக்குமா என்று நாம் கேட்கின்றோம்.

திலீபனின் உருவச்சிலை திறப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டுள்ளனர். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை ஏற்றுக்கொள்வாரா?

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகப் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதம் விதைக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அரசு பாதுகாப்பு சார்ந்த விடயங்களை அலட்சியப்படுத்தி வருகின்றது.

கடந்த நல்லாட்சி அரசும் இதேபோன்று செயற்பட்டதன் இறுதிக் கட்டமாகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அரசியல் வெற்றிகளுக்காகப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை எந்தக் காரணம் கொண்டும் அலட்சியப்படுத்த வேண்டாம் என அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

25 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

23 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

26 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சிறீதரன் எம்.பி. ஜனாதிபதிக்குக் கடிதம்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க…

20 0 0