உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

ஒரு வார்த்தைக்காக ஓர் உயிரைப் பறிக்காதீர்! : அனோஜனுக்குக் கருணை காட்டுமாறு சவூதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை!!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
35 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், சவூதி அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிர் எடுக்கப்படக் கூடாது எனவும், அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளைச் சவூதி அதிகாரிகள் திறந்த வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதம் “கருதப்படும் அவமானம் ஒன்றினால் குறைந்து போய்விடாது” எனக் குறிப்பிட்ட அவர், அதன் பலமானது ஒரு வார்த்தைக்காக உயிரைப் பறிப்பதில் தங்கியிருக்கக் கூடாது என்றார்.

மேலும், ஒவ்வொரு மாபெரும் மதத்தின் மையத்திலும் உள்ள கருணையைச் சவூதி அரேபியா வெளிப்படுத்தும் எனத் தான் நம்புவதாகவும் சஜித் பிரேமதாஸ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மரணதண்டனைத் தகவல்களைத் தொடர்ந்தே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் மற்றும் திலீபனின் வெண்கலச் சிலை தொடர்பில் ‘சிங்ஹல ராவய’ அமைப்பு கருத்து

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலை…

24 0 0
இலங்கை செய்திகள்

புற்றுநோய் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகள் : தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மீது விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…

23 0 0
இலங்கை செய்திகள்

புதுக்குடியிருப்பில் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் அமையவிருக்கும் புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின்…

26 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சிறீதரன் எம்.பி. ஜனாதிபதிக்குக் கடிதம்

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க…

20 0 0