உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

நாம் ஆட்சி அதிகாரத்தை பெற்றிருந்தாலும் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை பெறவே இல்லை.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
45 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றுப் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும், இன்னும் முழுமையான ‘அரச அதிகாரத்தை’ முழுமையாகப் பெறவில்லை என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி நேற்று ஏற்பாடு செய்திருந்த பேரணியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,
“நாங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளோம், ஜனாதிபதியை நியமித்துள்ளோம், உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவையும் பெற்றுள்ளோம். எனவே கட்சி ஏன் தொடர்ந்து பொதுப் பேரணிகளை நடத்துகின்றது எனச் சிலர் கேள்வி எழுப்பக்கூடும். நாம் தற்போது பெற்றிருப்பது ‘ஆட்சி அதிகாரத்தை’ மட்டுமே. ஆனால், ‘அரச அதிகாரம்’ என்று அழைக்கப்படும் மற்றொரு முக்கியமான பகுதி உள்ளது. இந்த அதிகாரத்துக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பதில்லை. அரச அதிகாரம் என்பது முழுமையான அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாகவே கட்டியெழுப்பப்பட்டு முன்னேறிச் செல்வதைக் குறிக்கின்றது.

அரசின் கொள்கைத் திட்டங்களும் அபிவிருத்தி முன்னெடுப்புகளும் இறுதியில் இந்த அரச அதிகாரத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த அரச அதிகாரத்தை ஒரே நாளில் அல்லது குறுகிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாது. அதனை முழுமையாக நிலைநிறுத்துவதற்குக் கால அவகாசம் தேவைப்படுகின்றது. இது நிர்வாகத்துக்கான காலகட்டமாகும்.” – என்றார்.

இதன்போது, இந்த அரச அதிகாரத்தை ஜனநாயக முறையில் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்தும் அவர் மேலும் விளக்கமளித்தார்.

“கடந்த 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச அதிகாரமும் வன்முறையின் மூலமே கைப்பற்றப்பட்டன. ஆனால், தற்போதைய சூழலில் அரச அதிகாரமும் முற்றிலும் ஜனநாயக முறைப்படி பெற்றுக்கொள்ளப்பட்டு, அதே ஜனநாயக வழியில் நாட்டை அபிவிருத்தி செய்யும் முயற்சி உலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னுதாரணமாகக் கற்றுக்கொள்வதற்கு வேறு எந்த நாடுகளின் அனுபவமும் நம்மிடம் இல்லை” என்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

தியாக தீபம் திலீபனின் 39ம் ஆண்டு நினைவு தினத்தின் முதலாவது நாள் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…

34 0 0
இலங்கை செய்திகள்

எமது கூட்டங்களுக்கு வருபவர்கள் மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை.!

“எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். நாங்கள் யாருக்கும்…

36 0 0
இலங்கை செய்திகள்

வட மாகாண கால்நடை வைத்தியர்கள் சுகயீன விடுப்பு போராட்டம்.!

வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாகம் மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி சுகயீன விடுப்பு…

30 0 0
இலங்கை செய்திகள்

ஊழல் வழக்குகளில் இருந்து தப்புவதற்கான வெற்றுக் கூச்சலே மொட்டுக் கட்சியின் பேரணி.!

“அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக, தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து…

57 0 0