உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

எல் நினோ, மற்றும் லா நினா தாக்கங்கள் தொடர்பில் சபையில் விசேட கேள்விகளை எழுப்பிய சஜித்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
61 பார்வைகள்

எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் முன்னறிவுறுத்தல்கள் என்ன என்பது குறித்து நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் விசேட கேள்விகளை எழுப்பினார்.

இது தொடர்பாக அவர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் மற்றும் அமைச்சரவை உப குழுவிடம் கோரிய விவரங்கள் வருமாறு:-

“எல் நினோ காலநிலை நிகழ்வினால் ஏற்படக்கூடிய நீர், மின்சாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய கடந்த 2026 ஜூன் 22ஆம் திகதியன்று சுற்றாடல் அமைச்சர் தலைமையில் விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டன. எனினும், இந்தக் குழு நியமிக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே ஐக்கிய மக்கள் சக்தி இதுகுறித்த எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஆகியவற்றின் தரவுகளின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகை மாவட்ட வாரியாக எவ்வளவு? இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

எல் நினோ தாக்கம் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் மிக அண்மைய உத்தியோகபூர்வ முன்னறிவிப்பு என்ன? இது அதன் உச்சபட்ச தீவிரத்தை அடைய எதிர்பார்க்கப்படும் காலம் யாது?

வறட்சியைத் தொடர்ந்து ஒக்டோபர் – நவம்பர் இடைப்பருவ காலத்தில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், மொனராகலை, பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான முன்எச்சரிக்கை மற்றும் வெளியேற்றும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா?

2026 ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற முதலாவது உப குழு கூட்டத்தில் அரச நிறுவனங்களிடம் கோரப்பட்ட செயற்றிட்டங்கள் குறித்த கால எல்லைக்குள் பெறப்பட்டதா? அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகளின் கால அட்டவணை என்ன?

ரந்தெனிகல, விக்டோரியா, கொத்மலை உள்ளிட்ட மகாவலி நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் என்ன? அனல் மின் நிலையங்களைச் சார்ந்திருப்பதால் ஏற்படும் மேலதிக செலவுகள் எதிர்வரும் மாதங்களில் நுகர்வோரின் மின்சாரக் கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சிறுபோகப் பருவத்தில் பாசன நீர் பற்றாக்குறையால் சேதமடைந்த நெல் மற்றும் பயிர்ச் செய்கைகளின் பரப்பளவு எவ்வளவு? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா? பெரும்போகத்துக்கான விதை, உர மானியம் மற்றும் பாசன நீர் வழங்கும் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா?” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணையின் முன்னேற்றம் குறித்து கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…

103 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில்…

99 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளைஇப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன்…

81 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் ஆய்வுக்காக மன்னாரைச் சுற்றித் துளையிடுவது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் அறிக்கை

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள்…

128 0 0