உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்

இலங்கை செய்திகள் 44 நிமிடங்கள் முன்
75 பார்வைகள்

கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன் மறந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்த விவகாரங்களை இப்போதாவது உடனே நிறைவேற்றுமாறும் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“2020.01.01 முதல் 2025.03.31 வரை ஓய்வுபெறத் தகுதி பெற்ற ஒரு இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு 03 – 2016 இலக்க சுற்றறிக்கையின்படியே சம்பளம் தயாரிக்கப்பட்டுள்ளதால் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களது ஓய்வூதியப் பணிக்கொடுப்பனவு முரண்பாடுகளைத் தீர்த்து, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு கோருகின்றேன். இல்லாவிட்டால் அது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

‘த பைனான்ஸ்’ நிறுவனம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 300 வைப்பாளர்கள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர். மத்திய வங்கியின் நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது இந்த நிறுவனத்தில் பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், வைப்பாளர்கள் அனைவருக்கும் முழுத் தொகையையும் வழங்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் சொத்துக்களை ஏலமிட வேண்டும்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டியிருந்த போதிலும், இன்னும் முடிக்கப்படவில்லை. திட்டப் பணிப்பாளர் கூட இல்லாமல், அமைச்சரவை அல்லது துறைமுக அதிகார சபையின் அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக இடம்பெறும் இந்தப் பணிகள் குறித்து உள்ளக கணக்காய்வு மற்றும் நாடாளுமன்ற விசாரணையை நடத்த வேண்டும்.

தங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இன்னும் முறையான சேவைப்பிரமாணக் குறிப்புகள் வழங்கப்படவில்லை. திறைசேரியில் பணம் நிரம்பியுள்ள நிலையில், ‘அத்தம’ திட்டம் மூலம் மக்களிடம் பணம் சேகரிப்பதை விட்டுவிட்டு இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குங்கள்.

இஸ்ரேல் நாட்டின் உட்கட்டமைப்புத் துறை வேலைவாய்ப்புகளுக்காகப் பதிவு செய்த 1,200 பேருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் லொட்டரி முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் 560 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நிலையில், அரசு ஊடாகச் செல்ல வேண்டிய வாய்ப்பு தாமதப்படுத்தப்படுவதால் அப்பாவி இளைஞர்கள் தனியாரிடம் சென்று 35 இலட்சம் வரை செலவழித்துப் பாதிக்கப்படுகின்றனர்.

நாட்டில் தனிக் கட்சி அரசை ஸ்தாபிக்கும் நடவடிக்கையாகவே 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது. இது நீதியின் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண அடியாகும். இதன் மூலம் மக்களின் வறுமையோ வேலையின்மையோ தீர்க்கப்படப் போவதில்லை என்பதால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும் எனத் வாக்குறுதியளித்துவிட்டு, இன்று 120 ரூபாவே வழங்கப்படுவதால் விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டத்தைச் சந்தித்து நிர்க்கதியாகியுள்ளனர். விவசாயிகளுக்குக் கொத்தமல்லி சூத்திரத்தின் கதியே ஏற்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு நபருக்கு 30 நாள்களுக்கு வாழ்வதற்கு 18 ஆயிரத்து 200 ரூபா போதுமானது என்று கூறப்படுகின்றது. இந்தத் தொகையைக் கொண்டு யதார்த்தத்தில் ஒருவரால் வாழ முடியுமா என அரசிடம் கேள்வி எழுப்புகின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!

இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில்…

91 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் ஆய்வுக்காக மன்னாரைச் சுற்றித் துளையிடுவது தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் அறிக்கை

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் நடைபெற்ற தனது முழுமையான அமர்வின் போது நாட்டின் நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான பிரச்சினைகள்…

123 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட பேச்சு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள…

135 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க பாய்ந்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்  சார்    ஆட்சியர் கலை மன்னன் அவர்களிடம்   விடுப்பு    கேட்டு வந்த   வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி…

123 0 0