உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
95 பார்வைகள்

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக மனிதத் தொடுகைக்கு உட்படாத பழமையான கல்லறை ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சான் சான் (Chan Chan) நகருக்கு அருகில் உள்ள இந்தப் புதைவிடத்தில், இன்கா நாகரிகத்திற்கு முந்தைய சிமு (Chimu) நாகரிகத்தைச் சேர்ந்த குறைந்தது 38 பேரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி.பி. 900 முதல் 1470 வரை பெருவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் தழைத்தோங்கிய சிமு நாகரிகக் காலத்தைச் சேர்ந்த உலோகம் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அரிய கலைப்பொருட்கள் இந்தக் கல்லறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் காலனித்துவக் காலத்தில் பல கல்லறைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தளம் முழுமையாகப் பாதுகாப்பாகவும் சேதமடையாமலும் இருப்பது நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, சிமு நாகரிகத்தின் இறுதிச் சடங்கு முறைகள் மற்றும் அவர்களின் பண்பாட்டு மரபுகள் குறித்த மேலதிக உண்மைகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்!

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…

114 0 0
உலக செய்திகள்

உக்ரைன், மால்டோவா எல்லையில் ஆளில்லாத வானூர்தித் தாக்குதல் : இருவர் பலி!

உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache)…

129 0 0
உலக செய்திகள்

கமரூனில் துப்பாக்கி முனையில் 5 ஆசிரியர்கள் கடத்தல்!

கமரூனின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். வூம்…

118 0 0
உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு: 14 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணம்…

122 0 0