உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நான் போர்க் குற்றவாளி அல்லன்! – சர்வதேசத் தடைகள் எனக்கு எதற்கு? : சவேந்திர சில்வா ஆதங்கம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
166 பார்வைகள்

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேசத் தடைகளையும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா முற்றாக நிராகரித்துள்ளார்.

இந்தியாவை மையமாகக் கொண்ட ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி இராணுவ நடவடிக்கையின்போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு முப்படைகளும் தீவிரமாக முயன்றன என்றும், இலங்கைப் படைப் பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொழில்முறை ரீதியாகவும் சட்டத்துக்குட்பட்டும் போரிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவால் தனக்குத் தடை விதிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த தடைகள் எதற்காக? நான் என்ன தவறு செய்தேன்? நான் போர்க் குற்றவாளி அல்லன், எனது நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே போரிட்டேன்” என்றும்  தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி.!

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும்…

64 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலை மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

சடலத்தை உரிய முறையில் பாதுகாக்காமல், அடிப்படை வசதிகளற்ற இடத்தில் வைத்திருந்ததாக அச்சுவேலி வைத்தியசாலை நிர்வாகம் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…

73 0 0
இலங்கை செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!

மொனராகலை, மெதகமை பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மெதகமை பிரதேசத்தைச்…

84 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சிகள் என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனதை அவர்களால் வெல்லவே முடியாது.!

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களைச் செய்தும், என்னதான் ஆட்டம் போட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வென்றுவிட முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலிலும்…

74 0 0