உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
8 செவ்வாய்

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
71 பார்வைகள்

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பு குப்பைகள் மற்றும் பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல் உருவாகியுள்ளதுடன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும் நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வைத்தியசாலையில் நீண்டகாலமாக போ*தைப்பொருள் வியாபாரம்; இருவர் கைது.!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இரு ஊழியர்கள், மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும்…

116 0 0
இலங்கை செய்திகள்

எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி.!

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாபெரும்…

82 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவி கௌரவிப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலாமிடத்தையும், கல்முனைக் கல்வி வலயத்தில் முதன்மை…

78 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

57 0 0