உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கம்பஹா இலக்கிய விழா.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
66 பார்வைகள்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒரு சிறு பிள்ளை, நிர்க்கதியான ஒருவர் அல்லது பெண் ஒருவரை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் சில கருத்துக்களைப் பார்க்கும்போது, பண்பாடான மனிதனின் தேவையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டுமே பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல என்றும், இலக்கியப் படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (06) கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘கம்பஹா இலக்கிய விழாவில்’ (GAMLIT 26) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட பண்பாடான மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ ஏற்படாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இலக்கிய விழா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கலை, இலக்கியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியின் காட்சிக் கூடங்களைப் பார்வையிடுவதில் பிரதமர் விசேட ஆர்வம் காட்டினார். இதன்போது, அத்துறைகளில் காணப்படும் புதிய போக்குகள் தொடர்பாக மாணவர்கள் முன்வைத்த விளக்கங்களைக் கேட்டறிந்ததுடன், அவர்களுடன் நட்புறவுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

அத்துடன், மாணவர்களின் திறமைகளையும் அதற்காக அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

பின்னர், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், கண்காட்சியில் பங்கேற்ற பாடசாலைகளுக்கும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, இலக்கிய விழாவில் உரையாற்றிய பிரதமர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு மாநகர சபையினால் இவ்வாறான இலக்கிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்படுவது முழு நாட்டிற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும் எனக் குறிப்பிட்டார். இந்த விழாவின் ‘பண்பாடான பிரஜையொருவரை கண்டடைதல்’ என்ற கருப்பொருள் மிகவும் காலத்திற்கேற்றதாக இருப்பதுடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் பண்பாடான மனிதனை உருவாக்கும் நோக்கம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மனிதனை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கலாசார விழா சில நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றும், இதன் பின்னணியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், பிள்ளைகளின் அர்ப்பணிப்பு, பயிற்சிகள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றின் ஊடாகவும், கலை மற்றும் இலக்கியத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் ஊடாகவும் பரிவுணர்வு கொண்ட மனிதர் ஒருவர் உருவாக்கப்படுவார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக விளங்கும் பாடசாலை மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான எதிர்காலப் பாதையை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட பிரதமர், இலக்கியத்தையும் கலையையும் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ளுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இதனை தேசிய மட்டத்திலான ஒரு நிகழ்ச்சித் திட்டமாக விரிவுபடுத்த முடியும் எனவும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள்,
கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி இந்த இலக்கிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளித்த அனைத்து நகர சபை உறுப்பினர்களையும் பாராட்டினார். நாட்டை பௌதீக ரீதியாக மட்டுமன்றி பண்பாட்டு ரீதியாகவும் கட்டியெழுப்புவது அனைவரினதும் பொறுப்பு என அவர் இங்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கம்பஹா மாநகர முதல்வர், பிரதி மாநகர முதல்வர் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுக்கின்றது அரசு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

61 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே.!

பொருளாதார ரீதியில் பாழடைந்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின்…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு.!

தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை…

68 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது…

72 0 0