உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமேசன் வணிக விமானம் விபத்து – ஐவர் பலி

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
147 பார்வைகள்

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து பயணித்த இந்த விமானம், மதியம் 2 மணியளவில் ஓடுபாதையைத் விட்டு விலகி விமான நிலையத்தின் பிற வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதியைக் கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் விமானம் மோதுண்டுள்ள நிலையில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வௌியாகவில்லை.

சுமார் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பிரித்தானியாவைத் தாக்கிய ‘ஒஸ்டின்’ புயல் – 7,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் செனல் தீவுகளை ‘ஒஸ்டின்’ புயல் தாக்கியுள்ள நிலையில், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளில் சுமார் 7,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிபிசி…

97 0 0
உலக செய்திகள்

நோபல் பரிசு தான் வழங்கவில்லை புலிட்சர் பரிசாவது வழங்கி இருக்கலாம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புலிட்சர் பரிசும் தனக்கு வழங்கப்பட்டிருக்க…

101 0 0
உலக செய்திகள்

தாய்வானில் சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து!

தாய்வானை நோக்கி சக்திவாய்ந்த புயல் நகர்ந்து வருவதையடுத்து, அங்கு சுமார் 1,000 உள்நாட்டு மற்றும் சர்வதேச வானூர்திப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி, இன்று…

99 0 0
உலக செய்திகள்

உக்ரைன் போர்க்களத்தில் முக்கிய திருப்பம்!

யுக்ரைனின் போர்க்களத்தில் மிக முக்கியமான தகவல் தொடர்பு அமைப்பாக விளங்கும் ‘ஸ்டார்ஷீல்ட்’ இராணுவ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

96 0 0