உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
78 பார்வைகள்

பாரவூர்தி ஒன்று உந்துருளி மீது மோதியதில் கணவன் மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி கிளிநொச்சி நோக்கி பயணித்த உந்துருளியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவரும் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22 ஆம் திருத்த விசாரணைகள் குறித்து கொமன்வெல்த் சட்டத்தரணிகள் விசனம்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண அல்லது முழுமையான நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய (கொமன்வெல்த்)…

10 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்.!

அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ – பசிபிக் பிராந்தியத்திலுள்ள சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க –…

54 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் வழங்க வேண்டும்.!

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க…

90 0 0
இலங்கை செய்திகள்

பொறுப்புக்கூறலை மேலும் பலப்படுத்துக; இலங்கை அரசிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் கோரிக்கை.!

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா.…

31 0 0