உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

சினிமா 2 வாரங்கள் முன்
87 பார்வைகள்

பிரபலங்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக வெளியிடுவது தற்போது புதிய போக்காக மாறியுள்ளது. இதற்காக பதிப்பகங்கள் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்குவதுடன், புத்தக விற்பனையிலும் பங்குகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் இணைந்து சுயசரிதை ஒன்றை எழுதி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் சுயசரிதை எழுதும் பணியில் இணைந்துள்ளார்.

பிரபல இந்தி பத்திரிகையாளர் ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுயசரிதையை எழுதி வருகிறார்.

இந்தப் புத்தகத்திற்கு “ரஹ்மான்: எ ரினைசன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. ‘ரினைசன்ஸ்’ என்பதற்கு ‘மறுமலர்ச்சி’ என பொருள்.

இது தொடர்பில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பித்துள்ளதாகவும், ரூபா சக்ரவர்த்தியுடன் இணைந்து “ரஹ்மான்: எ ரினைசன்ஸ்” என்ற புத்தகத்தை எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூபா சக்ரவர்த்தி இந்தப் புத்தகத்தின் இணையாசிரியராக செயற்படுவதாகவும், தனது உலகை வடிவமைத்த இசை, சிந்தனைகள், சவால்கள், ஆளுமைகள் மற்றும் படைப்பாற்றல் பயணம் உள்ளிட்ட விடயங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

புத்தகம் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!

தமிழ்நாட்டின்,சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் “எனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி” எனக் கூறினார்.…

172 0 0
சினிமா

ராமராஜன் மற்றும் இளையராஜாவை மீண்டும் இணைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில்…

169 0 0
சினிமா

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், குடும்ப உறவுகள்…

131 0 0
சினிமா

மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆபரேஷன் கங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால்…

85 0 0