உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடேங்கப்பா… அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

சினிமா 2 மாதங்கள் முன்
118 பார்வைகள்

இசையமைப்பாளர் அனிருத்திற்கு புதிய திரைப்படமொன்றுக்காக பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் ‘AA23’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

அல்லு அர்ஜுனின் 23ஆவது திரைப்படமாக உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘AA23’ திரைப்படத்திற்காக அனிருத்திற்கு ரூ.20 கோடி முதல் ரூ.23 கோடி வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்ற போதிலும், குறித்த தகவல் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இந்திய திரையுலகில் இசையமைப்பாளர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிகூடிய சம்பளங்களில் ஒன்றாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, அனிருத் தற்போது பல முன்னணி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் ‘அரசன்’, ‘கிங்’, ‘பாரடைஸ்’ மற்றும் ‘தர்மன்’ உள்ளிட்ட திரைப்படங்களும் அவரது கைவசம் உள்ளன.

அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் முதன்முறையாக இணையும் ‘AA23’ திரைப்படம் தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

“வயதை வைத்து யாரும் கணிக்க முடியாதபடி இருங்கள்” – நடிகை கஜோல் கருத்து!

பொலிவுட் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் கஜோல். தமிழில் ‘மின்சார கனவு’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், அண்மையில் நிகழ்வொன்றில் தெரிவித்த…

88 0 0
சினிமா

“விஜய் எனது Lucky Charm!” – நடிகை சமந்தா நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தந்தவர் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது,…

85 0 0
சினிமா

ஜெயிலர் 2 வில் வெட்டப்பட்ட காட்சிகள்

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு,…

87 0 0
சினிமா

BigBoss வீட்டில் அதிரடி : பச்சை இறைச்சியை சாப்பிட்ட டிடிஎஃப் வாசன்!

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 5 ஆவது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்,…

78 0 0