உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

சினிமா 1 மணி நேரம் முன்
29 பார்வைகள்

கார்த்தியின் சர்தார் 2 சென்சார் அப்டேட்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். இதில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இது அவரது 100-வது திரைப்படம் என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

மீண்டும் மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘ஹாரி பாட்டர்’!

உலகளவில் பிரபலமான ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாகக் கொண்டு HBO நிறுவனம் தயாரித்துள்ள புதிய தொலைக்காட்சித் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, புதிய தொடரின்…

65 0 0
சினிமா

சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபலங்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக வெளியிடுவது தற்போது புதிய போக்காக மாறியுள்ளது. இதற்காக பதிப்பகங்கள் சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்குவதுடன், புத்தக விற்பனையிலும் பங்குகளை…

58 0 0
சினிமா

விஜய் வெற்றியால் மாறுகிறதா ஜெயிலர் 2 படத்தின் கதை

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க (ரீ-ஷூட்) படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…

85 0 0
சினிமா

அடேங்கப்பா… அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

இசையமைப்பாளர் அனிருத்திற்கு புதிய திரைப்படமொன்றுக்காக பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், தனது அடுத்த திரைப்படத்தை…

64 0 0