உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ். போதனா வைத்தியசாலையின் சில பிரிவுகளை தற்காலிகமாக இடம்மாற்றுவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
121 பார்வைகள்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் இயங்கி வருகிறது. போதனா மருத்துவமனையில் தரைமட்டத்திலுள்ள சில பழமையான கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக் கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டுமானப் பணிகள் நிறைவடைய மூன்று ஆண்டுகள் செல்லும் என்பதால், இக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடம்பெயர வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான குறித்த கட்டடத்துக்கு மாற்றுவது தொடர்பாகவும், அதற்கான ஒப்பந்தம் தயாரிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கமைவாக, தற்போது மாகாண சபைக்குச் சொந்தமான அக் கட்டடத்தில் இயங்கிவரும் சுதேச வைத்தியத்துறை திணைக்களம், திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திப்பகுதியில் அமைந்துள்ள கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்), யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0