உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு : பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சஜித்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
46 பார்வைகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளால் பாதிக்கப்பட்டு, கொழும்பு – பொல்துவ சந்தியில் இன்று அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், இளைஞர்களின் கனவைச் சிதைக்கும் வகையில் இடம்பெறும் இந்த முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல்கொடுப்பதாக உறுதியளித்தார்.

இலங்கை – இஸ்ரேல் அரசுகளுக்கிடையில் 2023ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 70% தொழிலாளர்கள் அரசாங்க ஊடாகவும், 30% தொழிலாளர்கள் தனியார் துறை ஊடாகவும் அனுப்பப்பட வேண்டும். ஆனால், தற்போது இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட்டு, அரசு அனுப்ப வேண்டிய 70% பகுதி தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு பாரிய மோசடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.

அரசின் ஊடாகச் செல்லும் ஒரு தொழிலாளிக்கு 4 இலட்சம் ரூபா செலவாகும் நிலையில், தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்பும்போது சுமார் 45 இலட்சம் ரூபா வரை செலவாகின்றது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ஒரு நபரிடமிருந்து 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலாபமாக ஈட்டுவதுடன், இஸ்ரேல் செல்லக் காத்திருக்கும் 3 ஆயிரத்து 500 இளைஞர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுடனான பேச்சுகளை மீண்டும் நடத்தி, ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டவாறு 70% சதவிகிதத்தினரை அரசின் ஊடாக (குறைந்த செலவில் – 4 இலட்சம் ரூபாவில்) அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

சாதாரண மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிய தற்போதைய அரசு, இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் 3 ஆயிரத்து 500 பேரின் எதிர்காலத்தைப் பாதுகாத்து அவர்களுக்குரிய நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0