உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
70 பார்வைகள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையம் இன்று காலை திறந்து வைக்கபட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அதன் அத்தியட்சகர்  வைத்திய கலாநிதி  தங்கராசா கண்டீபன்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல  சுடர்கள்  ஏற்றப்பட்டதனை தொடர்ந்து என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியாசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி தங்கராசா கண்டீபன், என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்  விமல்ராஜன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

தொடர்ந்து தலைமை உரையினை மருத்துவமனை அத்தியட்சகர்  நிகழ்த்தினார். கருத்துரையினை   என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் விமல்ராஜன் ஆகியோர் நிகழ்த்தியதை தொடர்ந்து என்பு முறிவு சிகிச்சை நிபுணர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்.

இதில் விசேட வைத்திய நிபுணர்களான கங்கை ஆணன்,  சிவபாலன், பெண் நோயியல் நிபுணர்  ரோஹன்,  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை நலன்புரி சங்க நிர்வாகிகளான பேராசிரியர் நடராஜசுந்தரம், முன்னாள் மவட்ட செயலர் நீக்லஸ்பிள்ளை, வைத்திய சாலை கணக்காளர் திருமதி ராதை, நிர்வாக உத்தியோகத்தர் பாஸ்கரன், மருத்துவமனை தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0